15 Mar 2017

மட்டக்களப்பில் கொடூரம் சிறுவன் அடித்துக் கொலை

SHARE
மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா, மாதர் வீதியிலுள்ள வீடொன்றில் நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (14.03.2017) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அச்சிறுவனின் 50 வயது மதிக்கத் தக்க வளர்ப்புத் தாயை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் கூறினர்.

வளர்ப்புத் தாயே சிறுவனை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

எனினும்சி றுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்பொழுது முன்னதாகவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸாருக்கு வைத்தியசாலை அதிகாரிகள் தகவல் வழங்கினர்.

இதனை அடுத்து சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்த அவனது வளர்ப்புத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் சடலம்  பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் தலை மற்றும் முகத்தில் அடி காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்திய காத்தான்குடிப் பொலிஸாரும் மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பிரிவுப் பொலிஸாரும் அங்கிருந்து தடிகள் சிலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: