நாட்டின் அரசியல்காலாச்சாரத்தினை மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட மார்ச் 12 தேசிய பேரணியொன்று நாளை 13 ஆம் திகதி ஆரம்பமாகி நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் சென்று வாகனப்பேரணியாகச் சென்று விழிப்புணர்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இது எதிர்வரும் 13.03.2017 திகதியன்று கம்பஹா மாவட்டத்தில் மோட்டார் பேரூந்து தொடரணியாக முன்னெடுக்கப்பட்டு 24.03.2017 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அம் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையின் கீழ் மாவட்ட ரீதியாக குழுக்களை அமைத்து இது தொடர்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மட்டக்களப்பு மாவட்ட மட்ட ஆலோசனைக்கூட்டங்கள் 13ஆம் திகதி முதல் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளன.
இதன் முதலாவது கூட்டம் 13 ஆம் திகதி மண்முனை வடக்கு பிரதேச செயலக டேர்பா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 14 ஆம்திகதி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலும், அதனையடுத்து ஏறாவூர் பற்று, கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர்பிரிவுகளிலும் நடைபெறவுள்ளன.
பொலநறுவை மாவட்டத்திலிருந்து வரும் பேரணி மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் வரவேற்கப்பட்டு திருமலை வீதியால் அழைத்துவரப்பட்டு மட்டக்களப்பு நகரில் கூட்டம் நடத்தப்பட்டு மீண்டும் பெரியகல்லாறுவரை சென்று அமபாறை மாவட்டத்திற்கு செல்லவுள்ளது.
மார்ச் 12 இயக்கத்தின் பங்குதாரர்களாக சர்வோதயா, பவ்ரல், ரான்ஸ்பெரன்சி இன்ரர்நசனல், இலங்கை உள்ளுராட்சி உறுப்பினர்களின் மன்றம், சனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான அமைப்பு, ரைற்ஸ் நவ் மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு, இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை தாதியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், செடெக் நிறுவனம், தாய் மண்ணில் அன்னையரும் புதல்வியரும் அமைப்பு, இலங்கை இளைஞர் முஸ்லிம் சங்க சம்மேளனம், இலங்கை உள்ளுராட்சி சம்மேளனம், அத்துடன் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனுடன் இணைந்து செயற்படுகின்றனர்.

0 Comments:
Post a Comment