3 Feb 2017

தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருந்து சிறந்த தீர்வைப் பெற்று சிறப்பாக வாழ முயற்சிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்.

SHARE
வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழ்கின்ற தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருந்து சிறந்த தீர்வைப் பெற்று இந்த நாட்டில் சிறப்பாக வாழ முயற்சிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரதிவித்தார்.

புதன்கிழமை 01.02.2017 மட்டக்களப்பு ஏறாவூரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற ஜனாதிபதி பங்குபற்றிய பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றிய யோகேஸ்வரன்@

தமிழ் பேசும் மக்களை நான் ஒருபோதும்  மறக்க மாட்டேன் என்று ஜனாதிபதி தான் செல்லுமிடமெல்லாம் சொல்லிவரும் விடயம் சிறப்பானது.

நீதி நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற வகையிலே முன்னைய ஆட்சியை மாற்றி தற்போதைய நல்லாட்சியைக் கொண்டு வந்த மக்கள் என்ற ரீதியில் சிறுபான்மை இனங்களான தமிழ் மக்களையும் இஸ்லாமிய மக்களையும் ஜனாதிபதி விழித்துப் பேசுவது பெருமை தரும் விடயமாகும்.

நாம் அவருக்குக் காட்டிய ஆதரவு தான் அவர் இப்பொழுது சிறுபான்மையினரான நம்மீது கரிசனை காட்டுவதற்கும் வழி வகுத்திருக்கின்றது.

தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேலற்றுவதற்கு தான் உழகை;கப் போவதாகவும் ஜனாதிபதி வெளிப்படையாகப் பேசி வந்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களின் விடயத்தில் நன்கு திட்டமிட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஜனாபதிபதி அவர்களை நாம் பாராட்ட வேண்டும்.
2009ஆம் ஆண்டுக்கு முன் மட்டக்களப்பு மாவட்டத்திலே 47 மதுபான சாலைகள் இருந்தன.

ஆனால் தற்பொழுது அதன் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது.
அதிகப்படியான மதுபானப் பாவனையும் அதேவேளை 19.2 சதவீதம் என்கின்ற வறுமை நிலையையும் இந்த மாவட்டம் அடைந்துள்ளது துரதிருஸ்டமாகும்.
போதைப் பொருளுக்கு அடிiமாயன நிலையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும்.

ஜனாதிபதியின் போதைப் பொருள் ஒழிப்பு விடயத்திற்கு நாமும் உதவ வேண்டும்.

தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த தந்தை செல்வா அவர்கள் தமிழ் பேசும் சமூகத்திற்காக குரல் கொடுத்து, அதன்படி செயற்பட்டார்.
ஆனால், பின்னாட்களில் இலங்கைவாழ் இஸ்லாமிய மக்களிடம் பல கட்சிகள் உருவாகின.

ஆனாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்றுவரை தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில்தான் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.
அதிலும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மதிப்பு மிக்க தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் இஸ்லாமிய மக்களுக்கும் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதிலே மிகவும் உறுதியாக இருக்கின்றார்.

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் இஸ்லாமிய மக்கள் அனைவரும் இனப்பிரச்சினைத் தீர்வின் மூலம் அதன் நன்மைகளை அனுபவிக்க வேண்டும் என்பதிலே அவர் உறுதியாகவுள்ளார்.

அது மட்டுமல்ல வடக்கு கிழக்லே வாழ்கின்ற சிங்கள மக்கள் கூட தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்று மனங் கோணாத வகையில் அவர்களது நியாயமான உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சம்பந்தன் ஐயா அவர்கள் மிக்க கரிசனை கொண்டுள்ளார்.

சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களது உரிமைகளையும் பாதுகாத்து மதிக்கத் தக்க  நல்ல அரசியல் தீர்வு கிடைத்து விட வேண்டும் என்பதில் நாங்கள் ஆவலாக இருக்கின்றோம்.

தீர்வு விடயத்திலே எல்லா சமூகத்துடனும் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாரபட்சமின்றிப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றார்
எனவே, தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருந்து சிறந்த தீர்வைப் பெற்று சிறப்பாக வாழ முயற்சிக்க வேண்டும்.”என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: