மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரை வீதியில் இளைஞர்கள் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை (01.02.2017) இரவு 7.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏறாவூர் தளவாய் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் வினோத்ராஜ் என்ற 19 வயதான என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
மூன்று இளைஞர்கள் தலைக்க கவசமின்றி மோட்டார் சைக்கிளில் புன்னைக்குடா வீதி வழியாக அதி வேகமாகப் பயணித்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மருங்கிலிருந்த பனை மரத்துடன் மோதியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற அந்த இளைஞன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
அதில் மற்றைய இளைஞர்கள் இருவரும் சிறு காயங்களுக்குள்ளாகினர்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment