69ஆவது சுதந்திரத்தினத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை காலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் அரசாங்க அதிபர் திருமதி
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
04ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.25 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து அதிதிகள் வரவேற்கப்பட்டு நடைபவனியாக வெபர் மைதானத்தினை வந்தடைந்து நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து தேசியக்கொடியேற்றல், மாணவர்களின் உடற்பயிற்சி நிகழ:வு, மதத் தலைவர்களின் உரை, அரசாங்க அதிபர் உரை, விருந்தினர்களின் உரை என்றன நிறைவடைந்ததும் நட்பு ரீதியான உதைபந்தாட்ட நிகழ:வும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடா வருடம் மாவட்ட செயலக முன்றலில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்வு இம்முறை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறுகின்றமை சிறப்பம்சமாகும்.
நிகழ்வில், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக மட்டப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 Comments:
Post a Comment