26 Feb 2017

தமிழ் அரசியல்வாதிகளிடையே இன்று ஒற்றுமை தேவை. பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன்.

SHARE
(பழுகாமம் நிருபர்)

தமிழ் அரசியல்வாதிகளிடையே ஒற்றுமை நிலையானது இன்று காலத்தின்கட்டாய தேவையாக உள்ளது என பட்டிருப்புத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். இன்றைய அரசியல் நிலை தொடர்பாக தொடர்புகொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் வாதிகளிடையே தற்போது
ஒற்றுமையற்ற நிலை காணப்படுகின்றது. வெண்ணை திரண்டும வருகின்ற பொழுது தாழியினை உடைக்கின்ற செயற்பாடாக இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் ஒற்றுமையாக பயணித்து தமிழர்களுக்கான நிரந்தர அரசியற்தீர்வினையும், மக்களுக்கான அடிப்படை அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவே தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளை நம்பியுள்ளனர். ஆனால் மாறாக தற்போது ஒருவரை ஒருவர் குற்றம்கடிந்து பேசுவதால் தமிழ் மக்களிடையே தமிழ் அரசியல்வாதிகள் மீதுள்ள நம்பிக்கை இழந்த வண்ணம் உள்ளது.

இந்நாட்டின் பிரதமர் அன்றிலிருந்து இன்று வரையும் பிரித்தாளும் சதித்திட்டங்களை தீட்டி பிரிப்பதில் வல்லுனராக செயற்படுகின்றார். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அந்த சதிவலையில் தமிழ் அரசியற் தலைமைகளும் வீழ்ந்து விடாமல் தமிழ் மக்களுக்கான மீளப்பெற முடியாதபடியான அரசியற் தீர்வொன்றினை நோக்கி தமிழ் அரசியற் தலைமைகள் மெதுமெதுவாக காய்நகர்த்தி கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்  தங்களுக்குள்ளேயே ஒற்றுமையின்மையினை வெளிக்காட்டுவதானால் சிலவேளைகளில் அரசியற் தீர்வினை பெறுவதில் இன்னும் இழுபறிநிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது. மாவட்ட்திற்குள்ளே தமிழ் மக்களின் பிரதிநிதிகளக்கிடையெ எற்பட்டுள்ள கருத்து முரண்பாடு மேலும் தொடர்வது ஆரோக்கியமற்ற செயற்பாடாகும்.  சகோதர இனமான முஸ்லிம் மக்களும் அவர்களின் தலைமைகளும் தங்களுக்கான உரிமையினை பெறுவதற்கு கட்சி பேதமின்றி ஒற்றுமையாக செயற்படுவதானால் அவர்கள் இன்றுவரையும் முன்னேறிக்கொண்டிருக்கினறார்கள்.

உதாரணமாக கலால் சம்பந்தமான பிரச்சினையை இங்கு காட்டலாம்.  ஆகவே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக ஒருமித்த ஒரே குடையின்கீழ் செயற்படவேண்டும் எனவும், இந்த நல்லாட்சியிலும் மேன்மைதாங்கிய ஜனாதிபதி மற்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா காலத்தில் அரசியற்தீர்வினை பெறமுடியாதுள விட்டால் இனிஒருபோதும் தமிழ் மக்களக்கான தீர்வினை பெறமுடியாது எனவும்  தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: