இயந்திரமயமான வாழ்க்கையாக மாறிவருகின்றமையினாலேயே தொற்றா நோய்களின் தாக்கம் சிறுவர்கள் முதல் இளவயதினர் என அனைவரையும் தாக்குளின்றதொரு நிலை உருவாகிவருகிறது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
திங்கட்கிழமை (06) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமான விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பொதுவாக நாட்டில் இருக்கின்ற அரச தனியார் , பாடசாலகள் சேர்ந்த வயோதிபர்கள் உட்பட அனைவரும் உடல் நடத்தோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வதுதான ஒரு நாட்டினுடைய அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் வருடாந்தம் இந்த தேசிய உடற்பயிற்சி வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இப்போது மனித செயற்பாடுகளிலே இயந்திரங்கள் செயற்பாடு அதிகமாகிவிட்டது. இது வீடு, அலுவலகம் தொட்டு அத்தனை இடங்களிலும் இயந்திரங்களின் செயற்பாடு அதிகமாகிவிட்டதனால் மனிதனுடைய உடற்பயிற்சியும் நலனும் அருகி வருகின்ற ஒரு காலகட்டமாக இருக்கிறது. இதனால் பல தொற்றா நோய்களுக்கு சிறுவர்கள் உட்பட இளவயதிலேயே தொற்றா நோய்களுக்கு உள்ளாகின்றார்கள்.
இதனால் அரசு பாரிய சுமையைச் சுமக்க வேண்டியிருக்கிறது. இலவச மருத்துவ வசதிகள் காணப்படுவதனால் பல மில்லியன் ரூபாய்களை இதற்காகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
எனவே தான் வருமுன் காப்போம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்த உடற்பயிற்சி என்பது மிக முக்கியமானது. ஒரு மனிதன் உடல் நலத்தோடும் மகிழ்ச்சியோடும் குடும்பம் மகிழ்வோடும் பொருளாதாரச் சிறப்போடும் வாழ வேண்டுமானால் ஒவ்வொருவரும் உடற் பயிற்சி செய்கின்றவர்களாக இருக்க வேண்டும்.
சீனாவில் இருக்கின்றவர்கள் திடீரென பொது மைதானத்தில் கூடுவார்கள் யாராக இருந்தாலும், மக்கள் எல்லோரும் கூடுவார்கள். இசையை மட்டும் கொண்டு அவர்கள் இணைக்கப்படுகிறார்கள். ஒரு பத்து நிமிடம் அந்த உடற்பயிற்சியில் கலந்து கொள்வார்கள். ஒரு மனிதனுடைய அன்றாட செயற்பாடுகளில் உடற்பயிற்சி மிக முக்கியமானது. எனவே தான் இதனை உணர்ந்த அரசு இதன் ஊடாக தேக ஆரோககியமுள்ள சமூகத்தினை உருவாக்கும் வகையில் தேசிய உடற்பயிற்சி வாரத்தினை முன்னெடுத்து வருகிறது என்றார்.
இன்று காலை நடைபெற்ற உடல் நல மேம்பாட்டு வார நிகழ்வில், உயடற் பயிற்சிநிகழ்வுகள் நடைபெற்று, நடை பவனி ஒன்றும் நடைபெற்றது. இதில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்கிரிதரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட பிரதம கணக்காள் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பங்கு கொண்டார்கள்.
நிகழ்வின் இறுதியாக உணவுப் பழக்கவழக்கம், விளையாட்டு மற்றும் அப்பியாசச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் வைத்தியர் சி.விவேகானந்தனால் கருத்தரங்கும் ஒன்றும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வுகளை மாவட்ட விளையாட்டுப்பிரிவு வழிப்படுத்தி நடத்தியிருந்தது.
0 Comments:
Post a Comment