கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் அவர்களின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு புதூர் விக்கிணேஸ்வரா வித்தியாலயத்திற்கு பிளாஸ்டிக் கதிரைகள் கொள்வனவு செய்து கொடுக்கப்பட்டது. அதனை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க் கிழமை (07) பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சரின் 2016 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்ட பிள்hஸ்டிக் கதிரைகள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் அமைச்சரினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment