2 Aug 2025

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க வேண்டும்.

SHARE

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி “அனுர மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறி" மற்றும் “ஐ.எம.எப். மரணப் பொறியை எதிர்ப்போம்" எனும் தொணிப்பொருளில் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் சத்தியாகிரக போராட்டம் சனிக்கிழமை(02.08.2025) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இப்போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியினர் இதற்கு ஆதரவு வழங்கும் முகமாக கலந்து கொண்டுள்ளதுடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுதர வேண்டியும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சரியான நீதியான விசாரணை வேண்டும் எனும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இப்போராட்டத்தில் சுமார் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு, அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு, அவர்களின் காணி பிரச்சினைகளுக்கான தீர்வு சரியான முறையில் வழங்கப்பட வேண்டும், எனவும் ஆட்சிக்கு வர முன்னர் அரசாங்கம் கூறிய விடயங்களை சரியான முறையில் பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டன.























SHARE

Author: verified_user

0 Comments: