4 Aug 2025

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ISO தர சான்றிதழ் பெற்றுள்ளது.

SHARE

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ISO தர சான்றிதழ் பெற்றுள்ளது.

தர மேலாண்மை அமைப்புக்கான ISO 9001:2015 / SLS 9001:2015 தர சான்றிதழ், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ISO 9001:2015 என்பது சர்வதேச தரநிலை நிறுவனம் வெளியிடும் தர மேலாண்மை அமைப்பு தொடர்பான ஒரு சர்வதேச தரச் சான்றிதழ் என்பதோடு, SLS 9001:2015 என்பது இலங்கை தரநிலைகளுக்கேற்ப மேலே கூறிய ISO தர சான்றிதழின் தேசிய பதிப்பு ஆகும். இதை இலங்கை தரநிலை நிறுவனம் (SLSI) வழங்குகிறது. இச்சான்றிதழ் கிடைக்கப்பெறுவதானது குறித்த நிறுவனத்தின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் தரமானவை என்பதையும், பாவனையாளர் திருப்தி பெறும் வகையில் முறையாக நிர்வகிக்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்கிறது. 

இச்சான்றிதழ், தேசிய நீர் வழங்கல் சபையின் தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா பிராந்தியங்களுக்கு பொறுப்பான மேலதிக பொது முகாமையாளர் பொறியியலாளர் விக்ரமசிங்க மற்றும் கிழக்கு பிராந்தியத்தின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் நளீன் தேவரப்பெரும ஆகியோரால், மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எஸ். ஜயந்தன் அவர்களிடம், பிராந்திய அலுவலகத்தில் கடமையாற்றும் பிரிவு தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. 

இது பின்வரும் விடயப் பரப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலாக வழங்கப்பட்டுள்ளது:

குடிநீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்பு, இலங்கை தரநிலைகளுக்கு (SLS) 614 ஏற்ப குடிநீரை வழங்குவதற்கான உறுதிப்படுத்தல், கட்டுமான பணிகளுக்கான மேற்பார்வை மற்றும் நிர்வாகம், அதற்கான பொருட்கள் கொள்வனவு மற்றும் விநியோக முகாமைத்துவம். 

இவையனைத்தும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் கணிப்பீட்டாளர்களால் இரு காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வினைத்திறன் மிக்க மதிப்பீடுகளின் பின்னர் மேற்படி நிறுவனத்தினால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


 

SHARE

Author: verified_user

0 Comments: