6 Feb 2017

மகிழூர் கிராம மாணவி தவநேசன் தனுஸ்ரியா கிராமவரலாற்றில் முதற் தடவையாக பொறியியல் பீடத்திற்கு தெரிவு

SHARE
கடந்தமாதம் வெளியாகியகல்விப் பொதுத் தராதரஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கஷ்ட பிரதேசமாகிய மகிழூர் கிராமத்தினைச் சேர்ந்த தவநேசன் தனுஸ்ரியா உயர்தரம் கணித பிரிவில் பரீட்சைக்கு தோற்றி ஏ பி சி
பெறுபேற்றினை பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

குறித்தமாணவி மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் தரம் 11 வரை கல்விகற்று கல்விப் பொதுத் தராதரசாதாரண பரீட்சைக்கு தோற்றி 8ஏ 1எஸ் பேறுபேற்றினை பெற்றுஉயர் தரக் கல்வியினை பெற்றுக் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மட்.வின்சன்ற் உயர்தரமகளீர் பாடசாலையில் உயர் தரம் கணித பிரிவில் இணைந்து கொண்ட குறித்த மாணவி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேற்றினை பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு மாத்திரமல்லாது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மாணவியின் பெறுபேறானது கிராம கல்விவரலாற்றில் சாதனையாகக் கருதப்படுகிறது.


SHARE

Author: verified_user

0 Comments: