பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாமில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 280 பேருக்கு கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர்
சம்மேளனத்தின் தலைவர் சிவம் பாக்கியநாதன் செவ்வாய்க்கிழமை 07.02.2017 தெரிவித்தார்.
விசேட கண் பரிசோதனை நிபுணர்கள் மூலம் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பரிசோதிக்கப்பட்டதாவும் அவ்வாறானவர்களுக்கு கண் பரிசோதனை நிபுணர்கள் சிபார்சு செய்ததற்கமைவாக இலவசமாக கண் கண்ணாடிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த இலவச பரிசோதனை முகாமுக்கு கொழும்பு பட்டக்கண்ணு பவுண்டேஷன் நிதி அனுசரணை வழங்கியிருந்தது.
0 Comments:
Post a Comment