28 Feb 2017

ஆசிரிய இடமாற்றத்தினை தடுப்பதற்கு மாகாண சபை உறுப்பினர் துணைபோகின்றார். அதிபர் விசனம். மறுக்கின்றார் மாகாண சபை உறுப்பினர்.

SHARE
(பழுகாமம் நிருபர்)

எமது பாடசாலைக்கு; இடமாற்றம் பெற்று வரவிருந்த ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான ஆசிரியர் ஒருவரை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா மேற்கொண்டு வருவது கவலைக்குரிய விடயம் என மண்டூர் 14 அ.த.க பாடசாலையின் அதிபர் சி.புஸ்பராசா பகிரங்கமாக தெரிவித்தார். பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட
பாடசாலையில் இடம்பெற்ற 'அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் திட்டத்தின் கீழ் 17 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வின் போதே தெரிவித்தார்.
அதிபரின் குற்றச்சாட்டை குறித்த மாகாண சபை உறுப்பினர் மறுத்துள்ளார்.

'அவ்வாறு எந்த விதமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை எனவும், அப்படி நடைபெற்றிருந்தால் அதனை நிரூபிக்கலாம் என்று தெரிவித்ததுடன், குறித்த அதிபருக்கெதிராக நான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் குருமன்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சாதனையாளர்கள் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்hர்.

இவ் நிகழ்வுகள் இரண்டும் 25.02.2017ம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சிஇதண்டாயுதபாணி மற்றும் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வலயக்கல்விப்பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

SHARE

Author: verified_user

0 Comments: