28 Feb 2017

கணித பாடத்திற்கு 30 ஆசிரியர் வெற்றிடம். பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர்.

SHARE
(பழுகாமம் நிருபர்)

எமது கல்வி வலயத்திற்கு 30 கணித பாட ஆசிரியர்கள் தேவையாக உள்ளது என பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். மண்டூர் 14 சக்தி வித்தியாலயத்தில் இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில்
எமது வலயத்தில் உள்ள எல்லைப்புற பாடசாலைகளுக்கு மாகாண கல்வி அமைச்சர் அவர்கள் விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர்களைநியமித்துள்ளமையினால் அப்பாடங்களுக்கான ஆசிரிய வெற்றிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சர் தந்திரோபாயமாக செயற்பட்டு எமது எல்லைப்புற படசாலைகளுக்கு  ஆசிரிய வெற்றிடங்களை நிறைவேற்றியுள்ளமை சந்தோஷமான விடயமாகும். எமது வலயத்திற்கு 30 கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதுடன் 12 விஞ்ஞான ஆசிரியர்கள் இன்னும் தேவையாகவுள்ளது. 

ஆரம்பபிரிவுக்கான ஆசிரியர்கள் திறம்பட செயற்படுகின்றனர். இருந்த போதிலும் இன்னும் மூன்று பாடசாலைகளுக்கு ஆரம்பப்பிரிவு ஆசிரியர் வெற்றிடம் உள்ளது. இந்த வருடத்திற்குள் அவ்வாசிரியர் வெற்றிடமும் நிரப்பப்படும். ஆசிரியர் சமப்படுத்தல் செயற்பாடு செவ்வனவே நிகழ்ந்துள்ளது. மூன்று ஆசிரியர்களை தவிர ஏனைய அதிபர் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும்இ இந்த வருடம் எமக்கு வெற்றிக்கான வருடமாக மாறும் என்பதில் ஐயமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: