தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகளை இரு தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தையின் மூலம் பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறை ஏற்படுத்த வேண்டும்
என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பினால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் தரப்பினர் தெளிவு படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் பேரவைக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment