5 Dec 2025

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு.

சீரற்ற காலநிலை காரணமாக, தித்வா புயலின் தாக்கத்தினால்  நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் பொதுமக்கள், நலன்விரும்பிகள், விளையாட்டு கழகங்கள், ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளினால் சேகரிக்கப்படும் உலருணவு பொருட்கள் குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகளால் பிரதேச செயலாளர் .உதஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கிளைகள் ரீதியாக தாங்கள் சேகரித்த உலருணவு பொருட்களையும் கையளித்து வருகின்றனர். 

இதன் மூலம் சேகரிக்கப்படும் பொருட்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பொதிசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வழங்கும் நோக்கில் மாவட்ட செயலகத்துக்கு கையளிக்கப்படவுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.













SHARE

Author: verified_user

0 Comments: