4 Dec 2025

பட்டிருப்பு ரொட்றிக் கழகத்தினால் போரதீவுப் பற்றில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

SHARE

பட்டிருப்பு ரொட்றிக் கழகத்தினால் போரதீவுப் பற்றில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

அண்மையில் ஏற்பட்ட பேரனர்த்தத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு பலர் தாமாகவே முன்வந்து உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற ஒரு தொகுதி மக்களுக்கு இன்றயதினம் வியாழக்கிமை(04.12.2025) உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

பட்டிருப்பு ரொட்றிக் கழகத்தினால் அப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு இதன்போது உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

பட்டிருப்பு ரொட்றிக் கழகத்தின் தலைவர் வைத்தியர் பாமதி ஞானச்செல்வத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ரொட்றிக் கழகத்தின் மாவட்ட ஆளுனர் டெல்வின் பெரேராவின் பிரதிநிதி .ஜெகவண்ணன்மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள்ரொட்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் என பலரும் இதன்போது கலந்து  கொண்டிருந்தனர்.











































































SHARE

Author: verified_user

0 Comments: