மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் வருடாந்தோறும் நடாத்தப்பட்டுவரும் விவேகானந்தரின் பிறந்ததின நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (09) சமூகநலன்புரி அமைப்பின் உப தலைவர் வே.பாஸ்கரன்
தலைமையில் கிரான்குளம் சீமூன் விடுதியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமிஶ்ரீமத் பிரபுபிறேமானந்தஜீ அவர்கள் ஆத்மீக அதிதியாககலந்து சிறப்பித்தார்.
அத்தோடு பல்கலைக்கழக பேராசிரியர், அரசநிறுவனங்களின் உயர் அதிகாரிகள், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பங்காளிநிறுவன உயர் உத்தியோகத்தர்கள், மற்றும் விவேகானந்த கல்லூரிக்கு பக்கபலமாய் உள்ளநல் உள்ளங்கள், அமைப்பின் நிருவாகிகள், உத்தியோகத்தர்கள், பெற்றோர் , பயிற்சிபெறும் பயிலுனர்கள், பாடசாலை மாணவர்கள், எனபலர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் கல்லூரியில் புலம்பெயர் உறவுகளின் மூலம் கல்லூரி ஸ்தாபகர் க.சற்குணேஸ்வரன் அவர்களின் சமூகநலன்புரிஅமைப்பு-பிரித்தானியா அமைப்பின் ஊடாகநடைபெற்ற Information & Communication Technology
Technician (NVQ – L4), Computer Application Assistant (NVQ – L3) ஆகிய பயிற்சிநெறிகளுக்கான தேசிய தொழில்சார் தகைமைசான்றிதழ்கள், வேள்ட் விஷன் நிறுவனத்தின் பூரணநிதியுதவி மூலம் கல்லூரியின் விரிவாக்கல் கிளையான சங்கர்புரம் கிராமத்தில் உள்ள பயிற்சிநிலையத்தில் தையல் பயிற்சிபெற்ற பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள், மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தின் வாழ்வின் மீள் எழுச்சித்திட்ட நிதியுதவி மூலம் சங்கர்புரம் பயிற்சிநிலையத்தில் நடைபெற்றகையடக்கத் தொலைபேசிதிருத்துனர் பயிற்சி பெற்றவர்களுக்கானசான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டன.
அத்தோடு புலம்பெயர் உறவுகளின் நன்கொடைகள் மூலம் வருமானம் இன்றி தங்கிவாழும் முதியோர்களுக்கானஉடைகள் அன்பளிப்புச்செய்தல், எமது சமூகநலன்புரி அமைப்பினால் வறிய மாணவர்களுக்க மாதாந்த உதவித்தொகை வழங்கல், மற்றும் அகில இலங்கைரீதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் 2ம் இடத்தினைபிடித்த மட்.பழுகாமம் கண்டுமணி ம.வி கபடிவிளையாட்டு அணியினையினை கௌரவிக்கும் நிகழ்வுகள், போன்றவற்றுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வானது வருடாந்தோறும் மேற்படி கல்லூரியினால் சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினத்தினை முன்னிட்டு நடைபெற்று வருகின்ற நிகழ்வு என்றும், நிகழ்விற்கான செலவினை அமைப்பின் ஸ்தாபகரான க.சற்குணேஸ்வரன் அவர்கள் பொறுப்பெடுத்து நடாத்துவது என்பதும் வழமையானவிடயம் எனவும், அதில் நடைபெறுகின்ற மனிதநேயப்பணிபணிகளுக்கு வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் உறவுகள் பெரிதும் உதவிவருகின்றனர் என இக்கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment