6 Dec 2025

வெள்ளத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு இந்தியாவிலிருந்து ஆடைகள் அனுப்பி வைக்க ஏற்பாடு.

SHARE

வெள்ளத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு இந்தியாவிலிருந்து ஆடைகள் அனுப்பி வைக்க ஏற்பாடு.

சைவ சமய பாதுகாப்பு பேரவை தலைவர் க.சசிகுமார் பழனி ஆதீனம் சிவானந்த புலிபாணி பாத்திர சுவாமிகள், மஞ்சல் பயணம் அறக்கட்டளை, மலேசியா எம்.ஏ.ஷாண் ஆகியோரின் நிதி உதவியுடன் இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு ஒரு தொகுதி ஆடைகள் அனுப்பி வைக்கவுள்ளதாக சைவ சமய பாதுகாப்பு பேரவை தலைவர் க.சசிகுமார் தெரிவித்துள்ளார். 

அதில் குறிப்பாக சிறுவர்கள், பெண்கள், ஆண்களுள் என பலருக்குமான ஆடைகள் அடைங்கியுள்ளதாக சைவ சமய பாதுகாப்பு பேரவை தலைவர் க.சசிகுமார் மேலும் தெரிவித்தார். 

கடந்த காலங்களிலும் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளின்போது சைவ சமய பாதுகாப்பு பேரவை தலைவர் க.சசிகுமார் அவர்களின் தலைமையில் பல்வேறுபட்ட மனிதாபிமான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அதுபோல் இம்முறையும் தமது தொப்பிள்கொடி உதவுகளுக்கு தமது தலைமையில் உதவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சசிகுமார் தெரிவிக்கின்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: