தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்னர் சுகாதார அமைச்சராக இருந்த காரணத்தினால் துகாதாரத் துறை தொடர்பில் சகல பிரச்சனைகளையும் தெரிந்தவராக உள்ளார். தற்போதைய நல்லாட்சியில் ஜனாதிபதி அவர்கள் 2016 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்திலுள்ள சுகாதாரத் துறைக்கு பாரிய நிதிவசதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.முகமது.நஸீர் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி திறப்புவிழா புதன் கிழமை (01) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
இந்த நாட்டில் இருந்த ஆட்சியை மாற்றுவதற்கு பெரும்பாடு பட்டவர் எமது தற்போதைய எதிர்க் கட்சித்தலைவர் இரா.சம்மந்தன் அவர்கள். இதனூடாகத்தான் இந்த நாட்டில் மூன்று இன மக்களும் தற்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபோன்றுதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் செயற்பட்டுள்ளார். தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் பாரிய துரித வேலைத் திட்டங்களினூடாக கிழக்கு மாகாணத்தைக் கட்டியயெழுப்புகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள களுவாஞ்சிகுடி அதார வைத்தியசாலையின் சேவைகள் இப்பிரதேசத்திற்கு மாத்திரமின்றி முழுப் பிரதேசத்திற்கும் சேவைகள் வழங்கவுள்ளது. என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment