8 Jan 2017

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து அமைச்சர்களும் மூன்று இனத்திற்குமான அமைச்சர்களே

SHARE
கிழக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து அமைச்சர்களும் மூன்று இனத்திற்குமான அமைச்சர்களே
தவிர ஒரு இனத்திற்கான அமைச்சர்கள் அல்ல. அவ்வாறு இல்லாமல் ஒரு இனத்திற்கான அமைச்சர்களாக செயற்பட்டார்களானால் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கவும் தயங்கமாட்டேன். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்

கிழக்குமாகாணசபையின் நிதியொதுக்கீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
சுகாதாரம், கல்வி, வீதி, உள்ளுராட்சி போன்றவற்றில் 95 வீதத்திற்குமேல் கிழக்கு மாகாணசபையின் நிருவாக கட்டுப்பாட்டில் உள்ளது. 5 வீதமானதே மத்திய அரசின் கீழ் உள்ளது. 5 வீத மத்திய அரசின் கீழ் உள்ள திணைக்களங்களுக்கு 95வீதமான நிதிகளையும் 95வீதமான மாகாணசபை நிருவாகத்திற்குள் உள்ள திணைக்களங்களுக்கு 5வீத நிதியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளமை கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும்.

குறிப்பாக மாகாணசபை நிருவாகத்திற்குட்பட்ட சுகாதார அமைச்சுக்கு 4.5மில்லியன், கல்வி அமைச்சுக்கு 13.3மில்லியன் வீதி அமைச்சுக்கு 0.4மில்லியன், உள்ளுராட்சி அமைச்சுக்கு 2மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள சுகாதார அமைச்சுக்கு 161பில்லியன், கல்வி அமைச்சுக்கு 76பில்லியன், வீதி அபிவிருத்திக்கு 163பில்லியன், உள்ளுராட்சிக்கு 214பில்லியன் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்கியது என்பது சிறுபான்மையினர் தொடர்பாகவும், அதிகார பரவலாக்கல் தொடர்பாகவும், மத்திய அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது.

2016ம் ஆண்டைவிட 2017ம் ஆண்டு குறைந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கியதுமட்டுமல்லாமல், 2016ம் ஆண்டிற்கான நிதியொதுக்கீட்டில் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு 70வீதமான நிதியை இன்னும் ஒதுக்காமல் இருப்பது சிறுபான்மை மக்களை முடமாக்கும் செயலாகவே கருதுகிறேன். மத்தியரசின் மூலமாக கூடுதலான நிதியை ஒதுக்கிவிட்டு அந்த நிதியை இன ரீதியாகவும் மதரீதியாகவும் கட்சி ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் நிதியை ஒதுக்குவதற்கு 2017ம் ஆண்டு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவே கருதுகிறேன். இதனால் 2017ம் ஆண்டு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் போது தமிழ் கிராமம் புறக்கணிக்கப்படும் என நம்புகிறேன்.

தமிழ் பகுதிக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு திட்டமிட்டு நிதியொதுக்கும் போது கிழக்கு மாகாணசபை தட்டிக்கேட்காத பட்சத்தில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருந்தும் பிரியோசனம் இல்லை. இரண்டு அமைச்சர்களும் பலவிடயங்களை தட்டிக்கேட்டு பறித்தெடுத்து மக்களுக்கு ஒதுக்கவேண்டிய பொறுப்பு அவர்களிடம் உள்ளது.

எனவே கிழக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து அமைச்சர்களும் மூன்று இனத்திற்குமான அமைச்சர்களாக செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு இனத்திற்கான அமைச்சர்களாக செயற்பட்டார்களானால் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கவும் தயங்கமாட்டேன். என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: