8 Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று இரண்டு ஆண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு சிரமதான நிகழ்வு

SHARE
(க.விஜி)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று  இரண்டு ஆண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு துறைநீலாவணை  கிராமத்தில் உள்ள விபுலானந்தா வித்தியாலயத்தில்   ஞாயிற்றுக்கிழமை (08) காலை துறைநீலாவணை தெற்கு பிரிவுக்கான கிராம உத்தியோகஸ்தர் தினகரன்பிள்ளை கோகுலராஜ் தலைமையில் மாபெரும்   சிரமதான நிகழ்வு நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி  பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணைக்  கிராமத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிராமசேவை உத்தியோகஸ்தர் தி.கோகுலராஜ் அவர்களின் ஒருங்கிணைந்த தலைமைத்துவ நெறிப்படுத்தலுடன் ; ஜனாதிபதியின் பதவியேற்பு ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு , சிரமதான நிகழ்வு  துறைநீலாவணை விபுலானந்தா வித்தியாலயத்தில் பெருந்தொகையான கிராம மக்கள்,மாதர் அபிவிருத்தி சங்கம்,அம்பிகை மகளீர் சங்கம்,துறைநீலாவணை முத்து மாரியம்மன் ஆலய பரிபாலனசபை, ஆகியோர்கள் கலந்து கொண்டு சிரமதானம்  இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் வித்தியாலய முதல்வர் பூ.நவரெத்தினம்,கிராமசேவை உத்தியோகஸ்தர் வயிரமுத்து கனகசபைசுமார் 300 பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.




SHARE

Author: verified_user

0 Comments: