கிழக்கிலிருந்து போதையை ஒழிக்கு
நடவடிக்கையில் எந்த தடை வந்தாலும்
எதிரகொள்ளத் தயார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்
அஹமட்தெரிவித்தார்.
கிழக்கிலிருந்து போதையை
ஒழிப்பது கடினம் என சிலர் கூறிவருகின்ற போதும் அந்த சவாலை
எதிர்கொள்ள தாம் தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்ச்ர் ஹாபிஸ் நசீர்
அஹமட் குறிப்பிட்டார்.
கிழக்கில் எதிர்வரும்
பெப்ரவரி முதலாம் திகதி நடைபெறவுள்ள போதைக்கெதிரான மாபெரும்
பேரணி தொடர்பில் வியாழக்கிழமை
(05) வினவியபோதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
போதைப் பொருள் பாவனை காரணமாக நாட்டின்
எதிர்கால சொத்துக்களான இளைஞர் சமூகம் கண்முன்னே
சீரழிந்து போவதை பார்த்துக்கொண்டிருக்கும் சுயநல அரசியல்
தலைமையாக இல்லாமல் எமது எதிர்கால சந்த்தியினரின் நலனுக்காக தாம்
முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளோம்
அண்மைக்கால புள்ளிவிபரங்களின் பிரகாரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருளின் ஊடுருவல் அதிகரித்து
வருவதையே காண முடிகின்றது
இதனைத் தடுப்பதற்கு முறையான
பொறிமுறை அவசியம் எனவும் அத்துடன் இன்று பொதுமக்கள்
இதுதொடர்பான தகவல்களை வழங்குவதற்கு அச்சப்படும்
சூழ்நிலை உள்ளதால் அவர்களின் அச்சம்போக்கி தகவல் வழங்குநரின் இரகசியத்
தன்மை பாதுகாக்கப்படும் வித்த்தில் பாதுகாப்புத் தரப்பு மற்றும் சிவில்
சமூகத்தை உள்ளடக்கிய பொறிமுறையொன்றை உருவாக்குவது அவசியமாகவுள்ளது.
மக்களின் பூரண ஒத்துழைப்பு
இன்றி கிழக்கிலிருந்து போதையை ஒழிப்பது என்பது சாத்தியமற்ற விடயம்
என்பதால் மக்களுடன் இணைந்து போதைப் பொருளை
கிழக்கிலிருந்து ஒழிப்பதற்கான முழுமையான முயற்சிகளை
முன்னெடுக்கவுள்ளோம்.
கிழக்கு மாகாணத்திலிருந்து
போதையை ஒழிப்பதற்கு எதிர்வரும்
பெப்ரவரி முதலாம் திகதி ஏறாவூரில்
நடைபெறவுள்ள போதைப்பொருளுக்கு எதிரான பேரணியில்
அனைவரும் இன மத கட்சி பிரதேச வேறுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்
எனவும் இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்
அஹமட் அழைப்பு விடுத்தார்.
0 Comments:
Post a Comment