5 Jan 2017

கிழக்கு மாகாணத்தில் மாலை தொடக்கம் காலை வரை கடுங் குளிர்

SHARE
கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு தினங்களாக மாலை வேளையிலிருந்து காலை ஏழு மணிவரை கடுங் குளிர் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்தக் குளிர் நகரப் பகுதிகளை விட கிராமப் புறங்களிலும் வயற் பிரதேசங்களிலும் இன்னும் அதிகமாக உணரப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தங்களது அனுபவத்தின்படி இத்தகைய குளிர் நிலவுவது அடுத்து வரப்போகின்ற கடும் வறட்சிக்கான அறிகுறியாக உணர்வதாக விவசாயிகள் கவலைப் படுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான பருவமழை போதியளவு கிடைக்காது பொய்த்துப் போனதால் எற்கெனவே மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மழையை நம்பி மேற்கொள்ளப்படும் நெற் செய்கை 90 வீதம் கருகி அழிவடைந்து விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: