கிழக்கு மாகாணசபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதற்காக நடாத்தப்பட்ட பரீட்சையில், குறைந்த அளவிலான பட்டதாரிகளே சித்தியடைந்த நிலையில், இவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளை குறைத்து தேவையானவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டுமென ஞாயிற்றுக் கிழமை (24) நடைபெற்ற
கிழக்கு மாகாணசபையின் அமர்வில் பிரரேரணையொன்றியினை மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம்,
எம்.அன்வர் ஆகியோர் முன்வைத்தாக மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் கிழக்கு மாகாண சபை இரா.துரைரெட்ணம் உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்..…
மாகாணசபை உறுப்பினர் இருவராலும் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, புள்ளிகளை குறைப்பதற்கு சபையில் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனோடு மேலதிகமாக பலவிடயங்கள் சேர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று உறுப்பினர்கள் கூறியதற்கமைய, இதற்கென குழுவொன்றினை அமைத்து, அக்குழுவின் சிபார்சினை பெறுவதுடன், சபையில் கல்வி அமைச்சர், முதலமைச்சர் கலந்துகொள்ளாத நிலையில், அவர்களுடனும் இதுதொடர்பிடல் கலந்துரையாடல் நடாத்தி, அமைக்கப்படும் குழுவின் சிபார்சினை சபையின் தவிசாளர் கூடாக, பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கும், ஆளுனருக்கும் அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 Comments:
Post a Comment