26 Jan 2017

மட்டக்களப்பு தேருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

SHARE
அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு புதன்கிழமை (25.01.2017) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே,
நீதவான் இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரர்; மற்றும் தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர் அணியின் உப தலைவர் வி. பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே  29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் இனத்துவேஷ பேச்சுகளை பேசியதாகக் கூறி, அம்பிட்டியே சுமணரத்தின தேரருக்கு எதிராகவும் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர் அணியின்  உப தலைவர் வி.பூபாலராஜாவுக்கு எதிராகவும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  

இதை அடுத்து, இவர்கள் இருவருக்கும் கடந்த டிசெம்பெர் 14ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது.

இது தொடர்பான வழக்கு நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 






SHARE

Author: verified_user

0 Comments: