எம்மை எமது மக்கள் அவர்களது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்தது மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்காகவேதான் என்பதை நாம் மறந்துவிடவில்லை. இந்நிலையில் எமக்குக் கிடைக்கின்ற வசதி வாய்ப்புக்களை வைத்துக் கொண்டு மக்களுக்காக சேவை செய்து வருகின்றோம். மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு
எதற்காக தேர்தல்களில் போட்டியிட்டு செயற்படுகின்றது எப்தை அசாங்கத்தைப் பிரதிநிதுத்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் புரிந்து கொள்வதில்லை. இந்நிலையில் இன்றய கூட்டாட்சி அரசாங்கத்தில் எமது மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் எமது தலைவர்கள், பேச்சுவார்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
மேற்படி மாகாண சபை உறுப்பினரின் 250000 ரூபா நிதி ஒதுக்கிட்டில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பொது அமைப்புக்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பும் நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினத்தின் தலைமையில் வியாழக்கிழமை (26) பிரதேச செயலக கேட்பொர் கூட்டத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு பொதுஅமைப்புக்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்…
எமது மக்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்பங்கள் அனத்தும் தீர்ந்து அடிப்படைப்டிபிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகண்டு ஏனைய மக்களுக்குள்ள அனைத்து அந்தஸ்த்துக்களுடனும் வாழ வேண்டும் என்றதொரு தீர்வைத்தான் நாங்கள் எதிர் பார்த்திருக்கின்றோம்.
மாகாணசபையில் எனக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டை எனக்கும், எனது கட்சிக்கும் வாக்களித்த இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச மக்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிச்சைபோடுவதுபோல் பிரித்து அதனை சிறு அபிவிருத்திகளுக்காக வழங்கி வருகின்றேன். எனவே எமது மக்களுக்காக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டடைப்பின் பின்னால் தமிழ் மக்கள் அனைவரும் கைகோர்த்துள்ளதைப்போன்று எதிர்காலத்திலும் ஒற்றுமையுடன் செயற்ப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment