களுவாஞ்சிகுடி நகரில் புதன்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடவடிக்கையின்போது 4 இடங்களில் டெங்கு பரவும் சூழலை வைத்திருந்தமைக்காக
வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடிப் பிரதேச பொது சுகாதார வைத்தியப் பிரிவின் ஏற்பாட்டின் கீழ் நகரத்தைச் சுத்தம் செய்தலும், டெங்கு நுளம்பிலிருந்து தாதுகாத்தலும் தொடர்பான பாரிய சுகாதரா நடவடிக்கை ஒன்று புதன் கிழமை (25) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 4 கடை உரிமையாளர்களுக்கு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதோடு, தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் 14 பேருக்கு எச்சரிக்கைக் கடிதங்களும் வழங்கப்பட்டன.
மேலும், இதன்போது சிரமதானம், பொலித்தீன் பாவனையைத் தடுத்தல் தொடர்பாக பாடசாலை மாணவர்களுடாக விழிப்பூட்டல்களும் இடம்பெற்றன.
களுவாஞ்சிகுடி பொது சுhகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், களுவாஞ்சிகுடி பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர், மற்றும் விசேட அதிரடிப்படையினர், பெலிசார், பாடசாலை மாணவர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர், சமூர்த்தி உத்தியோகஸ்த்தர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.



















0 Comments:
Post a Comment