26 Jan 2017

கசப்புணர்வைக் களையும் சர்வமத செயற்பாட்டுக்கு மட்டக்களப்பு யாழ்ப்பாணம் உட்பட 16 மாவட்டங்கள் தெரிவு தேசிய சமாதானப் பேரவையின் இணைப்பாளர் ரஷிகா செனவிரெட்ன

SHARE
நாட்டில் கசப்புணர்வைக் களையும் சர்வமத இன ஐக்கிய செயற்பாட்டுக்கு மட்டக்களப்பு யாழ்ப்பாணம் உட்பட 16 மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக
தேசிய சமாதானப் பேரவையின் திட்டத்துக்கான இணைப்பாளர் ரஷிகா செனவிரெட்ன தெரிவித்தார்.

இலங்கையில் மதங்களைப் போதிக்கின்றவர்கள் அந்த மதங்களைப் பின்பற்றுகின்றவர்கள் மற்றும் பொது நலன்விரும்பிகள் ஒன்றாக இணைந்தாலேயொழிய நிரந்தர சமாதானம் என்பது வெறும் கனவாகவே இருந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தினால் இன ஐக்கியம் சிதைவடைந்துள்ள மட்டக்களப்பு உட்பட நாட்டின் இதர பகுதிகளில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் தொடர்பாக அவர் வியாழக்கிழமை (26.01.2017) கருத்து வெளியிட்டார்.

தொடர்ந்து கூறிய அவர்@ சமாதானத்தைக் கட்டியெழுப்புவதும் நல்லிணக்கத்தை உருவாக்குவதும் தனியே ஒரு சாராரின் அல்லது ஒரு சமூகத்தின் அல்லது ஒரு மதத்தின் பங்களிப்பாக மாத்திரம் இருக்க முடியாது.

ஒட்டுமொத்த சிவில் சமூகமும் இந்த செயற்பாட்டில் இணைந்து கொள்ள வேண்டும்.

மூன்று விளைவுகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

நிலைமாறுதலுக்கான நீதி தொடர்பாக சிவில் சமூகத்தை அறிவூட்டல், பொறிமுறைகளை உருவாக்குதல்,

பிரதேச மட்டத்தில் காணப்படும் இன முரண்பாடுகளைத் தீர்ப்பதனூடாக இன நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல்,

சமயத் தலைவர்களும் மதங்களைப் பின்பற்றுகின்ற ஏனைய மக்களும் பொதுநலன் விரும்பிகளும் ஒன்றாக இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பல்லின மக்களுக்கும் மனித நேயத்தோடு பாதிக்கப்பட்ட மக்கள் எந்தத் தேவைகளை நாடி நிற்கின்றார்களோ அதனைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளிலே சிறப்பாகப் பங்காற்ற முடியும்.

நிலைமாற்று நீதி என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்த நாட்டிலே எவ்வாறு சமாதானத்தைக் கட்டியெழுப்பலாம் என்பது பற்றி சிந்திக்கின்றோம்.
பல்வகை செயற்பாடுகளின் ஊடாக மோதல் உருமாற்றத்திற்கான முன்னெடுப்புக்களைச் செய்து வருவகின்றோம் “ஐnவையைவiபெ ஆரடவi –டுநஎநட Pயசவநெசளாip யுஉவழைn கழச ஊழகெடiஉவ வுசயளெகழசஅயவழைn” ஐஆPயுஊவு முரண்பாட்டை நிலைமாற்றுகின்ற பொழுது அதன் விளைவாக இன்னுமொரு புதிய முரண்பாடு உருவாகி விடக் கூடாது.

முரண்பாட்டு நிலைமாற்று எனும்பொழுது கடந்த 30 வருட காலம் யுத்ததினூடாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். யுத்தம் ஏன் உருவாகியது என்பதற்கான காரணம் இருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்து நாங்கள் இப்பொழுது சத்தமில்லாத சூழலில் இருந்தாலும் கூட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன வகையான விளைவுகளை அடைந்தார்கள், அதனால் அவர்கள் அடைந்த பங்கங்கள் என்ன என்று கண்டறிந்து அவைகளை இனம் கண்டு அதற்கான பரிகாரம் உதவி ஒத்தாசைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

இன்னுமொரு யுத்தம் இந்த நாட்டிலே ஏற்படாத வண்ணம் இந்த நாட்டு மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

எங்களது கடந்த கால கசப்புணர்வுகளின் வைராக்கியங்கள்;, சந்தேகங்கள், குரோதங்கள் இவைகளெல்லாம் ஒழிக்கப்பட்டு சுமுகமான நிலைமை ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க  வேண்டும்.

அதற்கான தேசிய கொள்கைகளை வகுத்தல், தீர்வுகளுக்கான யுக்திகளை வகுத்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அம்பாறை அனுராதபுரம், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, பதுளை, பொலொன்னறுவை உட்பட 16 மாவட்டங்களிலே இத்திட்டம் இவ்வாண்டு பெப்ரவரியிலிருந்து 2019 வரை அடுத்த இரண்டு வருடங்களுக்கு அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: