கிழக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான
வரவு செலவுத்திட்டத்தில் வருடந்தோறும் ஏற்படும் வௌ்ள நிலைமையை
கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை
நிறுவுவதற்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கில் மழைக்காலங்களில் அடிக்கடி பல
இடங்கள் வெள்ள நீரில் மூழ்குவதன் ஊடாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை
சந்தித்து வருகின்றனர் இதனைக் கருத்திற் கொண்டு முறையான வடிகாண் கட்டமைப்புக்களை
நிர்மாணிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தீர்மானித்துள்ளார்.
கிழக்கின் முக்கிய அரச அதிகாரிகளுடன் திருகோணமலையில் புதன்கிழமை
(25) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்,
கிழக்கில் வௌ்ளநீர் வடிந்தோடும் வகையில்
முறையான வடிகான் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கான திட்டமொன்றை தமக்கு விரைவில்
சமர்ப்பிக்குமாறு முதலமைச்சரின் செயலாளர் யூ எல் ஏ அஸீஸ் மற்றும் உரிய
அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்,
இந்தத் திட்டத்தின் ஊடாக அடிக்கடி
மழைக்காலங்களில் வௌ்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு
முன்னுரிமையளித்து அவற்றை விரைவில் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது கிழக்கு மாகாண சபைக்கு
ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பற்றாக்குறை காணப்படுவதால் இந்தத் திட்டத்திற்கான
நிதியினை மத்திய அரசாங்கத்தினூடாக பெறுவதற்கான முயற்சிகளையும்
முன்னெடுக்கவுள்ளோம்.
இதற்குரிய திட்டம் உரிய அதிகாரிகளால்
கையளிக்கப்படுமிடத்து அது தொடர்பில் கால தாமதமின்றி விரைவில் நடவடிக்கைகளை
முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ
அமைச்சுடனும் இது தொடர்பில் கலந்துரையாடி வௌ்ள அனர்த்த நிலைமைகளில் மக்களின்
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு
முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

0 Comments:
Post a Comment