26 Jan 2017

படகு கவிழ்ந்ததில் கடலுக்குச் சென்ற இறால் பிடிப்பதில் ஈடுபட்ட இரு சகோதரர்கள் உயிரிழப்பு மற்றுமொருவர் காப்பாற்றப்பட்டார்.

SHARE
மட்டக்களப்பு முகத்துவாரம் கடலுக்குச் சென்று இறால் பிடிப்பதில் ஈடுபட்டிருந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு  படகு கவிழ்ந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


மேலும், படகில் சென்ற நாவலடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சக மீனவர்களால் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சகோதரர்களான மட்டக்களப்பு திராய்மடு 8ஆம் குறுக்கைச் சேர்ந்த துரைமணி வசந்தன் (வயது 26) மற்றும் துரைமணி செல்வா (வயது 18) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இருவரின் சடலங்களும் கடலாட்சி அம்மன் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டன.

படகில் மூவர் சென்றிருந்த நிலையில் மீன்பிடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு கரையை நெருங்கும்போதே இவ் அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE

Author: verified_user

0 Comments: