26 Jan 2017

தனியார் போக்குவரத்து பஸ் வெள்ளம் காரணமாக வீதியில் குடை சாய்ந்துள்ளது.

SHARE

(க.விஜி) அம்பாறை மாவட்டத்தின் கல்முனையையும், நாவிதன்வெளியையும் இணைக்கும் கிட்டங்கி வீதியில் புதன்கிழமை (25)  
காலை 11.00 மணியளவில் தனியார் போக்குவரத்து பஸ் வெள்ளம் காரணமாக வீதியில் குடை சாய்ந்துள்ளது.

மழை நீர்  காரணமாக வீதியில் ஒன்றரை அடி வெள்ளநீர் பீறிட்டு பாய்கின்றது. கல்முனை இருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் கிட்டங்கி தாம்போதி வீதியில் தடம்புரள முட்பட்டுள்ளது.  இதனை அறிந்த பயணிகள் தெய்வாதீனமாக அல்லோகளப்பட்டு பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளார்கள்.

இதனால் பயணிகளுக்கு எதுவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பஸ்வண்டி குடைசாய்ந்த நிலையில் அவ்விடத்திலேயே காணப்படுகின்றது.


சவளைக்கடை பொலிசார் குறித்த இடத்திற்கு விரைந்து போக்குவரத்தினை சீர் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


SHARE

Author: verified_user

0 Comments: