பெப்ரவரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு வருகை
தரும் பொழுது காணி உறுதிப்பத்திரமின்றி இருக்கும் 2500 பேருக்குரிய காணிப் பத்திரங்களை ஜனாதிபதி வழங்கி வைப்பார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
திருகோணமலையில் குடியிருப்புக் காணிகளுக்கான உறுதிகள் கிடைக்காமல் இருந்த 130 குடியிருப்பாளர்களுக்கான காணி உறுதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் திங்கட்கிழமை (09.01.2017) திருகோணமலை குளக்கோட்டன் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்@ இனப்பிரச்சனைக்கு தாமதமின்றி தீர்வு காணப்பட வேண்டும், நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று கிழக்கு மாகாணமும் பாரபட்சமற்ற அபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதைத்தான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவின மக்களும் வலியுறுத்துகின்றார்கள்.
13வது அரசியல் சரத்திலே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற காணி அதிகாரத்தை விட்டுக் கொடுக்கின்ற ஒரு மாகாண சபையாக கிழக்கு மாகாணம் ஒருபோதும் இருக்காது.
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3000 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் தகுதிவாய்ந்த அமைச்சாக கிழக்கு மாகாண காணி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.
இன்னமும் அந்த அமைச்சின் அமைச்சரும் அதிகாரிகளும் காணி அமைச்சின் அதிகாரங்களைப் பிரயோகிக்க எடுக்கும் முயற்சிகளுக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் நானும் எமது அமைச்சர் வாரியமும் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.
அரசியல் யாப்பிலே வழங்கிப்பட்டிருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் மேலும் அதிகாரம் வேண்டும் என்று கூக்குரலிட முடியாது.
இருக்கின்ற அதிகாரங்களை ஆகக் கூடியளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்நிழ்வில் வீதி அபிவிருத்தி, காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி உட்பட அந்த அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment