11 Jan 2017

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக சமூக ஆர்வலர்கள் 22 பேரைக் கொண்ட சமூக மட்ட விழிப்புணர்வுக் குழு அமைப்பு மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் கனகசபை சுதர்சன்

SHARE
சமூக மட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் சமூக ஆர்வலர்கள் 22 பேரைக் கொண்ட சமூக மட்ட விழிப்புணர்வுக்
குழு அமைக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் (community Correction Officer)     கனகசபை சுதர்சன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (11.01.2017) மேலும் தெரிவித்த அவர்

நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா Magistrate and Additional District Judge Manikkavasagar Ganesharajah  அவர்களின் கரிசனையின்பால்    சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக  இந்த சமூக மட்ட விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற பல்வேறு விதமான  சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு விழிப்புணர்வூட்டி அவர்களை குடும்ப, சமூக, நாட்டுப் பொறுப்புள்ளவர்களாக நெறிப்படுத்துவதற்காக இந்த சமூக மட்டக் குழு செயற்படவிருக்கின்றது.

மட்டக்களப்பில் இயங்குகின்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த பிரிவு சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, சட்ட உதவி ஆணைக்குழு, பெண்கள் அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழு, மத்தியஸ்த சபை தவிசாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட்ட உத்தியோகத்தர், கிராம மற்றும் அபிவிருத்தி சங்கம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், பெண்கள் அபிவிருத்தி மாவட்ட உத்தியோகத்தர்கள், மற்றும் சமூக நல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதி நிதிகள் ஆகிய பல்தரப்பினரையும் கொண்டதாக இந்த சமூக மட்ட விழிப்புணர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: