மனித உரிமை தினமான டிசம்பர் 10 சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், என பலர் இதன்போது இனைந்திருந்தனர்.
இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதில் மேலும் குறிப்பிடுகையில்…..
காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி இன்றும் எட்டாக்கனியாகவே இருக்கின்றன. காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியசட்ட மூலம் சிவில் அமைப்புக்களிடமும் ஆலோசனைகளைப் பெற்று ஆக்கப்படுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை நடைபெறாமல் எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் அது சட்டமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அலுவலகம் கொழும்பில் அமையவுள்ளதாக எமக்கு தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. இச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மாவட்ட ரீதியாக பிரதேச ரீதியாக காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்குரிய உரிமைகளைப் பெறுவதற்கு உறுதுணையாக அமையும்.
நிலைமாறு கால நீதியுடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பிடு வழங்குதல் போன்ற விடையங்கள் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கின்றன. இதனை அரசாங்கம் மிகவிரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். சிறுபான்மை மக்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான சில சதிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பிரிஏ சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என கடந்த வருடம் நடைபெற்ற மனித உரிமை நாளில் 1000 அஞ்சல் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தோம், அதற்கு இன்றுவரை எதுவித பதில்களும் இல்லை, அந்த சட்டமும் எடுக்கவில்லை, பிரிஏ சட்டத்திற்குப் பதிலாக சிரிஏ என்ற சட்டமும் வரவுள்ளதாக அறிகின்றோம். எனவே அந்த நாட்டில் மனித உரிமைகள் நிலைநாட்ட வேண்டுமாக இருந்தால் இவை போன்ற சட்டங்கள் வருவதை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம். எனவே இருக்கின்ற சட்டங்களுக்கு ஊடாக சட்டம் ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை, தேசியம், உள்ளிட்ட அனைத்தையும் பாதுககாக்க முடியும் என்பதை நாம் தெழிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment