மாவட்ட அரச அதிபர்,திட்ட பணிப்பாளர்கள் பிரதேச செயலளார்கள், உதவித்திட்ட பணிப்பாளர்கள் ,அத்தோடு அனைத்து அரச அதிகாரிகள்,அரச
ஊழியர்கள் அனைவரும் தங்களால் முடிந்த பணிகளை சிறப்பாக செய்திருக்கின்றார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். என பிரதி அமைச்சர் அலி கூறினார்.
திங்கட் கிழமை (26)மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
மாகாண சபை அமைச்சர்
கள் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அங்கு பிரதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அதே போன்று இந்த வருடம் சிறப்பாக சேவையாற்றிய அனைத்து அரச துறைகளையும் பாராட்டுவதோடு
நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.எதிர்காலத்திலும் அவர்களது சேவைகள் சிறப்பாக அமைய வேண்டும். அத்தோடு மலரவிருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறி இருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment