ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று செவ்வாய்கிழமை இயற்கை எய்தினார்.
உடல்நலக்குறைவுகாரணமாக கடந்த 11 ஆம் திகதி கொழும்பிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் அரசியலில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த ரட்னசிறி விக்ரமநாயக்க 1933 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி பிறந்தார்.
ஹொரணை மில்லேவ ஆரம்ப பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியை கற்ற ரட்னசிறி விக்ரமநாயக்க, பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலம், பருத்திதுறை ஹாட்லி கல்லூரி, கொழும்பு ஆனந்த கல்லூரி ஆகியவற்றிலும் தனது பாடசாலை கல்வியை தொடர்ந்திருந்தார்.
1955 ஆம் ஆண்டு சட்ட கற்கைகளுக்காக லண்டன் சென்ற விக்ரமநாயக்க, சட்டதுறை தொடர்பான பரீட்சையின் முதல் பாகத்தில் சித்தியடைந்திருந்திருந்த போதிலும் இறுதிப் பரீட்சைக்கு ஒரு மாதம் இருந்த நிலையில் 1959 ஆம் ஆண்டு நாடு திரும்பியிருந்தார்.
நாடு திரும்பிய பின்னர் 1960 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் இடதுசாரியான மகஜன எக்செத் பெரமுன என்ற கட்சி சார்பில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக அவர் தேர்வாகியிருந்தார்.
இதன்பின்னர் 1962 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்த ரட்னசிறி விக்ரமநாயக்க, அந்த கட்சியில் 60 ஆண்டுகளுக்கும் அதிககாலம் உறுப்பினராக செயற்பட்டிருந்தார்.
1965 மற்றும் 1970 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத் தேர்தல்களில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த ரட்னசிறி விக்ரமநாயக்க, 1975 தொடக்கம் 1977 ஆம் ஆண்டு வரை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராகவும் பிரதி நீதி அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.
1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகவும் அவர் பதவிவகித்திருந்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை தொடர்ந்து சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசியல் நட்சத்திரமாக உருவாகிய காலப்பகுதியில் அவருக்கு நெருக்கமான ஒருவராக ரட்னசிறி விக்ரமரட்ன காணப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் பிரதி பாதுகாப்பு அமைச்சராகவும் பௌத்த சாசன அமைச்சராகவும் ரட்னசிறி விக்ரமசிங்க செயற்பட்டிருந்தார்.
2001 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்காவின் பிரதமராக செயற்பட்ட ரட்னசிறி விக்ரமநாயக்க, மீண்டும் 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மீண்டும் பிரதமராக பதவி வகித்திருந்தார்.
2001 ஆம் ஆண்டு முதல் முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற போது பௌத்த நிகழ்வொன்றில் பங்கேற்ற ரட்னசிறி விக்ரமநாயக்க, தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யும் வகையில் இலங்கையர்கள் பல பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
போர்முழக்கங்கள் மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதன் மூலம் இராஜதந்திரிகள் மற்றும் ஊடகதுறையினர் மத்தியில் பிரபல்யமான ஒருவராகவும் அவர் காணப்பட்டார். அடைந்திருந்தார்.
நெருக்கமாக பழாகாத ஒருவராகவும் சமாளிப்பதற்கு கடினமான ஒருவராகவும் இராஜதந்திரிகளால் ரட்னசிறி விக்ரநாயக்க கருதப்பட்டிருந்தார்.
2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா நாட்டில் இல்லாத நிலையில் பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட ரட்னசிறி விக்ரமநாயக்க, தமிழீழ விடுதலை புலிகளுடன் மீண்டும் யுத்தம் நடத்தப்படும் என பல தடவைகள் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டு, இரண்டு நாட்களில் கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நாட்டின் பிரதமராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட யுத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சர்வதேச ரீதியில் நியாயப்படுத்தும் முயற்சிகளையும் ரட்னசிறி விக்ரமநாயக்க மேற்கொண்டிருந்தார்.
சுகவீனம் காரணமாக 2010 ஆம் ஆண்டு செயற்பாட்டு அரசியில் இருந்து அவர் விலகியிருந்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான விக்ரமரத்ன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராகவும் கடமையாற்றி வந்திருந்தார்.
விக்ரமரத்னவின் புதல்வரான விதுர விக்ரமரத்ன கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திவருகின் றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment