6 Dec 2016

கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு

SHARE
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வ மதக் குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் திங்கட்;கிழமை (05.12.2016) இடம்பெற்றது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நேரடியாக அல்லது மறைமுகமாகப் பாதிக்கப்பட்டோர் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு சில பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் இந்த உண்மை கூறும் அமர்வில் முன் வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அனுபவங்கள் இங்கு முன் வைக்கப்பட்டதாக இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன தெரிவித்தார்.

இந்த அனுபவக் கதைகள் மூலம் வெளியிடப்படும் பாதிக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உரிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதே இந்த அமர்வு ஒழுங்கு செய்யப்பட்டதின் பிரதான நோக்கங்களில் ஒன்று என இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: