6 Dec 2016

ஓலைக் குடிசைகளிலே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது சிலர் தங்களுடைய வீடுகளை மாடிகளாக மாற்றுவதற்கும் விண்ணப்பிக்கின்றார்கள் - மட்டு.அரசாங்க அதிபர்.

SHARE
ஓலைக் குடிசைசகளிலே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது சிலர் தங்களுடைய வீடுகளை மாடி வீடுகiளாக மாற்றுவதற்கும், சிலர் வீடுகளில் இணைந்த குளியலறையாக மாற்றுவதற்குமாக வீடுகளைப் பெறுவதற்கு விண்ணப்பித்திருக்கின்றார்கள்.
என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வ மதக் குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு திங்கட் கிழமை (05) மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறப்பிட்டார், இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

வன்னியிலிருந்து மீளக்குடியேறிய 550 பேருக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம்,  எம்மிடம் பதிவு செய்த 250 முன்னாள் போராளிகளுக்கும் நிரந்தர வீடுகளை  அமைத்துக் கொடுத்துள்ளோம். கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு குடும்ப அங்கத்தவர்களுக்கும், வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். இவ்விடையங்கள் அனைத்தும் மிகவும் நுணுக்கமாக விசாரணைகள் செய்யப்பட்டு நடைபெறுகின்றன.

இவை ஒருபுறமிருக்க  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரண உதவிகள், வீட்டுத்திட்டங்கள் சில இடங்களில் உரியவர்களுக்குக் கிடைக்காமல், எதுவித பாதிப்பற்றவர்களுக்கும் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களும், இங்கு நடைபெறுகின்றன. 
பாதிக்கப்பட்ட மக்களுக்காக வருகின்ற நிவாரணங்களை பாதிப்பற்றவர்கள் பறித்தெடுக்க முனையும் சமூக விரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு சமூக பிரதிநிதிகள், சமய பெரியவர்கள், முன்வர வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. 

ஓலைக் குடிசைகளிலே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது சிலர் தங்களுடைய வீடுகளை மாடி வீடுகiளாக மாற்றுவதற்கும், சிலர் வீடுகளில் இணைந்த குளியலறையாக மாற்றுவதற்குமாக வீடுகளைப் பெறுவதற்கு விண்ணப்பித்திருக்கின்றார்கள்.

எனவே இந்த சமூகத்திலே மனித உரிமைகள் பற்றியும், மனித நேயத்தைப் பற்றியும், உரையாற்றிக் கொண்டிரு;ககின்ற சந்தர்ப்பத்திலேதான் இவ்வாறான மனித உரிமைகளை மீறுகின்றார்கள்.

எனவே நாம் பேசுவதும் கருத்தரங்ககள் வைப்பதுவும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்துவிடாது. அவர்களுகன்ரிய நிவாரணஙகளிலும், அர்ப்பணிப்பு உள்ளவர்களாகவும், மனச்சாட்சி உடையவார்களாகவும்,  நாம் செயற்பட வேண்டும்.  இதுபோன்ற சமாதான போரவைகள் நடைமுகைளில் ஏற்படுகின்ற சிக்கல்கல்கள், முறைகேடுகள் , உண்மையானவர்கள்  உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் துரதிஸ்ட்டவசமான சம்பவங்களை நிருவகிக்க எம்மோடு செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: