(துறையூர் தாஸன்)
முன்னாள் தமிழக. முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகரும், தலைவருமான எம்.ஜி.ஆர் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் மீதும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஆழமான பற்றினைக் கொண்டிருந்தார்.
உதவிகளும் செய்தார். என மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு விடுத்துள்ள அஞ்சலியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
அவரது மறைவின் பின்னர் அ.தி.மு.கழகத்தின் தலைமை, நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவ்வேளையில் தனது ஆளுமை தலைமைத்துவம் மூலமாக அக்கட்சியின் தலைமைத்துவத்தினைத் தன் பக்கமாக ஈர்த்துக் கொண்டவர்தான் ஜெயலலிதா அம்மையார் அவர்கள்.
இவர் தமிழர்களின் போராட்டம் தொடர்பாக அவ்வப்போது கருத்து நிலைகளில் தளம்பி இருந்தாலும், இலங்கையில் 2005 இற்குப் பிற்பட்ட காலத்தில் வடக்கு–கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கும், தமிழ்ப் போராளிகளுக்கும் சார்பான நிலையில் செயற்பட்டுவந்தார்.
தனது அக்கறையை அவ்வப்போது கனதியாக வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கையில் தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான அரசியல் தீர்வினை அவர் விரும்பியிருந்தார்.
அப்படியான நிலைமையில் இருந்த அம்மையார் தற்போது எம்மையும் தமிழக மக்களையும் விட்டு மறைந்துள்ளார். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இழந்து தவிக்கும் தமிழகத் தமிழ் உறவுகளுக்கும் எமது ஆழமான அனுதாபத்தினைக் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிவரும் தலைமையும் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் அக்கறையோடு செயற்படுவார்கள் என நம்புகின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment