7 Dec 2016

முனைப்பினால் துவிச்சக்கரவண்டிகள், நீர்பம்பி வழங்கி வைப்பு

SHARE
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி மற்றும்
பாடசாலைக்கான நீர்பம்பி போன்றன முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால்  செவ்வாய் கிழமை (06) மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

தரம் 5 புலமைப்பரிசில் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல்பெற்ற மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கும் அதேவேளை போக்குவரத்து செய்வதற்காக சிரமப்படுகின்ற வறுமைக்கோட்டின் வாழும் இரண்டு மாணவர்களுக்குமாணவர்களுக்கே துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுவிஸ்லாந்தில் வசித்து வரும் திரு.திருமதி.இராசலிங்கம்( செட்டி) அவர்களின் புதல்வன் தரணியனின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் அன்பளிப்பூடாகவே துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டன.

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி  வலய கல்வி பணிப்பாளர் .பாஸ்கரன், முனைப்பின் ஆலோசகர் கே.புஸ்பராசா, செயலாளர் .குகநாதன், பொருளாளர் ரி.தயானந்தரவி ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.


முனைப்பு நிறுவனமானது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட, வறுமையினால் இன்னல்களை எதிர்கொள்ளும் மக்களை கருத்தில் கொண்டு பல உதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: