7 Dec 2016

நெற்செய்கை கருகுவதால் மழை வேண்டிப் பிரார்த்தனை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இம்முறை பருவ மழை குறைவாகக் கிடைத்துள்ளதால் நெற்செய்கை வறட்சி காரணமாக கருக ஆரம்பித்துள்ளது.

இதனால் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேசத்தின் பதுளை வீதியை அண்டிய வயல் பகுதிகளில்மழை வேண்டிப் பிரார்த்திக்கும் விஷேட தொழுகையில் விவசாயிகளும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் ஈடுபட்டார்கள்.

இலுப்படிச்சேனை, வெப்பவெட்டுவான், கொம்பர்சேனை, பண்டாரியாக்கட்டு பகுதி விவசாயிகள் இந்த மழை வேண்டி தொழும் விஷேட தொழுகையில் ஈடுபட்டார்கள்.

மேலும் அங்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்ஷிப்லி பாறூக் மழை வேண்டிய விஷேட தொழுகையிலும் கலந்து கொண்டு வறட்சினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்
உறுகாமம் குளத்து வாய்க்கால்கள் மூலமாக இந்த வயல் நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சக் கூடிய வசதிகள் முன்னர் இருந்த போதும் தற்போது அந்த வாய்க்கால்கள் முற்றாக தூர்ந்துபோய் மூடப்பட்டுள்ளதனால் விவசாயிகள் நீரைப் பெற்றுக்கொள்ள முடியாது இருப்பதையும் மாகாண சபை உறுப்பினரிடம் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

அங்குள்ள வறட்சி  நிலைமையினை நேரடியாக பார்வையிட்ட ஷிப்லி பாறூக் நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்களுடன் தொடர்பு கொண்டு இப்பிரச்சினைக்கான சாத்தியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.





SHARE

Author: verified_user

0 Comments: