6 Dec 2016

மாடு மேய்க்கும் தொழில் செய்து ஜீவனோபாயம் நடத்தி வந்த எனது கணவர் வெட்டிக் கொல்லப்பட்டமைக்கு சிங்களவர் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறொன்றுமில்லை. விதவைப் பெண் தில்ருக் ஷி

SHARE
மாடு மேய்க்கும் தொழில் செய்து ஜீவனோபாயம் நடத்தி வந்த எனது கணவர் 1995 ஆம் ஆண்டு ஒக்ரோபெர் 25 ஆம் திகதி வெட்டிக் கொல்லப்பட்டமைக்கு சிங்களவர் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறொன்றுமில்லை என பொத்துவில் பாணமைப் பிரதேசத்தைச் சேர்ந்த விதவைப் பெண் கே. தில்ருக்ஷி (வயது 42) தெரிவித்தார்.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வ மதக் குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் திங்கட்;கிழமை (05.12.2016) இடம்பெற்றபோது அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நேரடியாக அல்லது மறைமுகமாகப் பாதிக்கப்பட்டோர் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு சில பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் இந்த உண்மை கூறும் அமர்வில் முன் வைக்கப்பட்டன.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி. சுவர்ணராஜா தலைமையிலான மதத் தலைவர்கள், மனித உரிமை ஆணைக்குழு அலுவலர்கள் மற்றும் மனித உரிமைச் செயறபாட்டாளர்களைக் கொண்ட அமர்வில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்@

எனது கணவரை அவர்கள் பல துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்ததை எண்ணி இன்றுவரை நானும் எனது பிள்ளைகளும் வருந்திக் கொண்டிருக்கின்றோம். இது கொடுமையிலும் கொடுமை. எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். நான் கணவரின்றியும், எனது பிள்ளைகள் தகப்பனின்றியும் அநாதரவாகி இருக்கின்றோம்.
தற்பொழுது ஜீவனோபாயத்திற்காக நான் ஆடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டுள்ளேன்.

கணவருக்கு இழப்பீடாக அரசாங்கம் ஐம்பதினாயிரம் ரூhhவையே தந்தது.
எனக்கு ஏற்பட்ட கொடூரமான பாதிப்பு இனி இந்த நாட்டில் வாழும் எந்த சமூகத்தவருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதே எனது பிரார்த்தனையாகும்.”
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அனுபவங்கள் இங்கு முன்வைக்கப்பட்டன. 

SHARE

Author: verified_user

0 Comments: