வன்முறைக்கான கட்டமைப்புக்களை தொடர்ந்தேர்ச்சையாக வைத்துக் கொண்டு நிலையான சமாதானத்தை அடைய முடியாது என இலங்கை அபிவிருத்திக்கான
உதவு ஊக்க மையத்தின் (Srilanka Centre for
Development Facilitation) இணைப்பாளர் ஏ. சொர்ணலிங்கம்.
வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா பணிப்பாளர் சபைக் கூட்டத் தொடர் ஞாயிறன்று (11.12.2016) மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள கலையாக்கக் கூடத்தில் இடம்பெற்றது.
அங்கு எதிர்கால நிகழ்ச்சித் திட்டமிடலுக்கான வளவாளராகக் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்@
நீடித்து நிலைக்கும் சமாதானத்தை கட்டியெழுப்புவதாயின் சமாதானத்துக்கான கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.
அதேவேளை, ஏற்கெனவே உள்ள வன்முறைக்கான கட்டமைப்புக்களை நிர்மூலமாக்கவும் வேண்டும்.
இவ்விரண்டு கருமங்களும் ஏக காலத்தில் சமாந்தரமாக இடம்பெற்றாலேதான் நிலையான சமாதானத்துக்கான நிகழ்ச்சி நிரல் வெற்றி பெறும்.
யுத்தத்திற்கு பின்னரான அணுகுமுறைகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் கரிசனைக்கும் அமுலாக்கத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று யுத்தம் இடம் பெற்ற நாடுகளில் பணியாற்றி ஆய்வுகளை மேற்கொண்ட வல்லுநர்கள் சிபார்சு செய்கின்றார்கள்.
போருக்குப் பின்னரான நிலைமையில் சமாதானத்திற்குத் தேவையான கட்டமைப்புக்களை உருவாக்குதல், ஏற்கெனவே வன்முறைக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டு வந்த கட்டமைப்புக்களை நிர்மூலமாக்குதல் என இந்த இரண்டு அணுகுமுறைகளையும் சமாந்தரமாக அமுலாக்குதல் வேண்டும்.
நிலைமாறு கால நீதியிலும் இந்த இரு அணுகுமுறைகளும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
ஆகவே இலங்கையில் இதுவரை நடந்து முடிந்த வன்முறைச் சூழமைவு இனிமேல் நடந்து விடக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகள் சமாந்தரமாக எல்லாத் தரப்பினராலும் வெளிப்படையாக முன்னெடுக்கப்படல் வேண்டும்” என்றார்.
இந்தப் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் கிழக்குப் பல்கலைக் கழக பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன், வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா நிறைவேற்றுப் பணிப்பாளர் போல் சற்குணநாயகம், வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா ஸ்தாபகர்களில் ஒருவரான சமூக சேவையாளர் ஏ.எச்.ஏ. ஹ{ஸைன் உள்ளிட்ட இன்னும் சில பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment