11 Dec 2016

துறைநீலாவணை முன்னேற்ற மயப்படுத்தல் அமையத்தினால் இசைக்குழு (Band) மாணவர்களுக்கு சீருடையும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு

SHARE
(துறையூர் தாஸன்)

துறைநீலாவணை முன்னேற்ற மயப்படுத்தல் அமையத்தினால் இசைக்குழு (Band)  மாணவர்களுக்கு சீருடையும்
விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு

துறைநீலாவணையில் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் கூட்டம், துறைநீலாவணை முன்னேற்றமயப்படுத்தல் அமையத் தலைவர் க.ஜெகதீஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை  (11) இடம்பெற்றது.

பொறியியலாளர் க.கனகரெத்தினம் (அவுஸ்ரேலியா), மட்டக்களப்பு முன்னாள் மாநகர ஆணையாளர் எஸ்.நவநீதன் (கனடா), பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர், திருமதி.என்.புள்ளநாயகம், சிரேஸ்ட விரிவுரையாளர்களான, கலாநிதி அரசரெத்தினம். பே.சச்சிதானந்தன்;, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

துறைநீலாவணைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாக உள்ளவருமான க.கனகரெத்தினம் இதன்போது கருத்து தெரிவிக்கையில்…..

துறைநீலாவணைக் கிராமத்தை எவ்வாறு பலவழிகளில் முன்னேற்றலாம் என்றும் அதற்கு தன்னாலான பலமுயற்சிகளைதான் செய்து கொண்டு வருவதாகவும், துறைநீலாவணை வாழ் மக்கள் இதற்கான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

துறைநீலாவணை மகாவித்தியாலய இசைக்குழு (டீயனெ) மாணவர்களுக்கு அதற்குரிய சீருடையும் விளையாட்டு உபகரணங்களும் இதன்போது பாடசாலைஅதிபரிடம் வழங்கிவைக்கப்பட்டன.






SHARE

Author: verified_user

0 Comments: