11 Dec 2016

பௌத்தம் பகுத்தறிவுமிக்கதுடன் அப்பாதையில் செல்வதைவிடுத்து, அடிப்படைவாதத்தில் தலைவர்கள் செல்லக்கூடாது

SHARE
(துறையூர் தாஸன்)

மனிதனால் தெய்வமாகமுடியும்.அதுமுடியாவிட்டாலும் மனிதனாகவாழவேண்டும்.மிருகங்களாகமாறிவிடக்கூடாது.‘பௌத்தம் பகுத்தறிவுமிக்கது’அப்பாதையில் தலைவர்கள் செல்லவேண்டும் அடிப்படைவாதத்தில் தலைவர்கள்
செல்லக்கூடாதுஎனபாராளுமன்றில்,பௌத்தசாசனஅமைச்சுமற்றும் கிறிஸ்தவவிவகாரசுற்றுலாத்துறைஅமைச்சு,தபால்-தபால் சேவைகள், இஸ்லாமியவிவகார அமைச்சுதொடர்பானவிவாதம்  நடைபெற்றபோதுஅதில் கலந்துகொண்டுஉரையாற்றியபோதே,நாடாளுமன்றஉறுப்பினர் ஞா.சிறிநேசன் இவ்வாறுகருத்துக்களைமுன்வைத்தார்.

மேலும்,மதத்தலைவர்கள் நன்நெறியாளர்களாக வேண்டு மெயொழிய மதவெறியர்களாகித் தமதுமரியாதைகளையும், மதத்தின் புனிதத்துவத்தையும் கெடுக்க கூடாதுஎனவும் மதங்கள் வாழ்க்கையில் மக்களைபக்குவப்படுத்த வேண்டுமெனவும், எந்தமதமும் எமக்குநல்லவற்றையேபோதிக்கின்றன. ஆனால் அடிப்படைவாதிகளாகவுள்ள சிலமதவெறியர்கள் மதத்தலைவர்களுக்கான அருகதையினை இழந்துவிடுவதுடன்,மதத்தின் சீரியதன்மைக்கும் இழுக்குஏற்படுத்திவிடுகின்றனர்.

மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்குமத நெறியாளர்கள் உதாரணங்களாக உள்ளனர். உதாரணங்களாகபுத்தர்,விவேகானந்தர் இயேசுநாதர்,நபிகள் நாயகம், ஆகியோரை கூற முடியும்.‘ மனிதர்களும் மிருகம் ஆகலாம்’என்பதற்குமதவெறியர்களைஉதாரணமாக கூறமுடியும். இவர்களாற்றான் மதவன்முறைகள், இன வன்முறைகள் ஏற்பட்டுநாடுகள் குட்டிச்சுவராகின்றது. இலங்கையிலும் இப்படியானவன்முறையாளர்கள் சிலர் உள்ளனர். எல்லாமதங்களும் நல்லவற்றையே கூறுகின்றன. ஆனால் மதவெறியர்கள் மதத்தினைதமதுசுயநலன்களுக்காகபயன்படுத்திநாட்டையும் மக்களையும் சீரழிக்கின்றனர். இலங்கையிலும் இப்படியானபோக்குகள் காணப்பட்டன,காணப்படுகின்றன. இதனைஅரசாங்கம் கட்டுப்படுத்தவேண்டும். இல்லையேல் இந்தநாட்டுக்குவளமானஎதிர்காலம் இல்லாமல் போய்விடும் ‘ஒன்றேகுலம் ஒருவனேதேவன்’‘யாதும் ஊரேயாவரும் கேளீர்’என்றஉயர்வான கூற்றுக்களுக்குஅமையநாம் நடந்துகொள்ளவேண்டும்.
மேலும் தபால்துறை,கஸ்டப் பிரதேசங்களானவெல்லாவளிபிரதேசசெயலகத்திற்குட்பட்டகாக்காச்சிவட்டை,கிரான் பிரதேசத்திற்குட்பட்டவடமுனை, கூளாவடிபோன்றபிரதேசங்களிலும் உபதபாலகங்கள் அமைக்கவேண்டும் என்றுஅமைச்சர் அப்துல் கலீலிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.அத்துடன் கரடியனாறுஉபதபாலகம் தரம் உயர்த்தப்படவேண்டுமெனவும்அது 40 ஆண்டுகளாகதனியொருஅரையிற்றான் இயங்கிவருகின்றதென்றும்அதுமுக்கியமானகேந்திரதானத்தில் அமையப்பெற்றுள்ளதுஎன்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் பழுதடைந்தகோவில்கள் திருத்தப்படுவதுபோல் தேவாலயங்கள் திருத்தப்படவேண்டும் மேலும் சுற்றுலாத் துறையானதுமக்களின் கலாசாரத்தினைபாதிக்காதவாறுஅபிவிருத்திசெய்யப்படவேண்டும் என்றும்சுட்டிக்காட்டப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: