11 Dec 2016

கல்முனை 2 ஆம் பிரிவின் எல்லைப் பகுதியில்குப்பை கூழங்களை கொட்டியதை அடுத்து, எதிர்ப்பு

SHARE
(துறையூர் தாஸன்)

கல்முனை மாநகரசபையினர் சாய்ந்தமருது, கல்முனைக்குடி போன்றபிரதேசங்களில் சேகரித்தகுப்பைகூளங்களை தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற கல்முனை 2 ஆம் பிரிவின் எல்லைப் பகுதியில்குப்பை கூழங்களை கொட்டியதை அடுத்து, வெள்ளிக்கிழமை (09) அங்குபெரும் எதிர்ப்பும் பதற்றமும் உருவாகியது.
இச்சம்பவம் குறித்துமேலும் தெரியவருவதாவது, கல்முனை 3 ஆம் பிரிவின் ஆரம்பத்திலுள்ள “கண்ணகை அம்மன் ஆலயத்திற்கருகேயுள்ள”தமிழ் மக்கள் பரந்துவாழும் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமையன்று(09) மாநகர சபை லொறிகள் குப்பைகளைகொட்ட ஆரம்பித்துள்ளன. அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தும், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தழிழ்த்தேசிய கூட்டமைப்பின் கிழக்குமாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், சமூகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் போன்றோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இவ்விடத்திற்குவிரைந்தவந்த இவ்விருவரும் கல்முனை தமிழ்ப் பிரதேச, பிரதேச செயலாளர் லவநாதன், கல்முனை வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி, கல்முனை பொலிஸ் ஆகியோருக்கு உடனடியாக தொடர்பை ஏற்படுத்தி, அவ் அலுவலர்களின் ஊடாககொட்டப்பட்ட குப்பைகள் அவ்விடத்தைவிட்டு அகற்றஏற்பாடு செய்தனர். அவ்வெளியில்; கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தும் முற்றுமுழுதாக, முழுமையாக சனிக்கிழமை வரை (10) வரை சுத்தப்படுத்தப்பட வில்லையெனவும் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் அரசியல் வாதிகளின் பின்னனியில் இவ்வாறான பல பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றனஎனவும் ,அவ்வூர் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.







SHARE

Author: verified_user

0 Comments: