12 Dec 2016

குழந்தைகளை சுதந்திரமாக இயங்கவிடுங்கள்! தைரியத்தை ஊட்டி வளர்ப்பதே எதிர்கால தேவையாகும் - வைத்திய அத்தியட்சகர் சுகுணன்

SHARE
குழந்தைகளை சுதந்திரமாக இயங்கவிடுங்கள்! மாறாக பயத்தினை காட்டி அவர்களின் தைரியத்தை மழுங்கடிக்க செய்ய வேண்டாம், தைரியத்தை ஊட்டி வளர்ப்பதே எதிர்கால தேவையாகும் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் அவர்கள் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி பாரதி,மல்லிகை முன்பள்ளிகளின் கலைநிகழ்வும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக் கிழமை அதன் தலைவர் கி.மகாதேவன் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை விசேட அதிதியாக அ.கந்தவேள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எந்த  விடயத்தை எடுத்துக் கொண்டாலும் குழந்தைகளுக்கு தொடக்கப்பபுள்ளி பெற்றோராகவே அமைந்து விடுகின்றனர். இருந்தும் பெற்றோருக்க அடுத்தபடியாக அமைவர்கள் ஆசிரியர்களே அதற்காகத்தான் மாதா,பிதா,குரு என்கின்றனர். 
 பிள்ளைகளின் கற்றல் விடயத்தில் முன்னிலை வசிப்பவர்கள் ஆசிரியர்களே முன்பள்ளி என்பது குழந்தைகளுக்கு எழுதவோ, வாசிக்கவோ பழக்குவதற்கான இடமாக கருதக் கூடாது, தற்கால உலகில் ஏற்படுகின்ற சாவால்களுக்கு முகங் கொடுக்க கூடிய பல விடயங்களை கற்றுக் கொடுக்கின்ற ஆரம்ப இடமே முன்பள்ளிகளாகும்.

பெற்றோர்கள் தற்காலத்தில் குழந்தைகளளை பயங்காட்டி வளர்க்கின்ற தன்மை கூடிக்கொண்டு செல்கின்றது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகள் தங்களது தைரியத்தை இழக்கின்றனர். இதன் விளைவால் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க  முடியாமல் திண்டாடுகின்ற நிலைகாணப்படுகின்றது.

பிள்ளைகளை நான்கு சுவருக்குள் பூட்டி வைத்து வளர்க்கின்றனர், அவர்களை சுதந்திரமாக இயங்கவிடுவதில்லை இதனால்தான் பிள்ளைகள் கோளைகளாகின்றனர். பின்னர் இதனை நினைத்து கவலையடைய வேண்டிய நிலை ஏற்படும்;. எனவே தங்களது குழந்தைகளை அனைத்து வியங்களிலும் தைரியத்தை கொடுத்து, பற்றுதல்களை ஏற்படுத்தி  வீரம்மிக்கவர்களாக வளர்த்தெடுங்கள் இதுவே எமது  எதிர்கால சமூதாயத்திற்கு மிகவும் முக்கியமானது என அவர் இதன்போது தெரிவித்தார்…
















SHARE

Author: verified_user

0 Comments: