தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புள்ளை-நாஉல பிரதான வீதியில் திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் 5 பேர் படு காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் காரில் பயணித்த மூவர் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை அரசாங்க பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளi மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment