25 Dec 2016

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் யோசப் பரராசசிங்கத்தின் 11 வது ஆண்டு நினைநாள்

SHARE
படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமை;பபின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோசம் பரராசசிங்கம் அவர்களின் 11 வது ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக் கிழமை (25) மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் கி.யோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சா.வியாளேந்திரன், கே.கோடீஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், பி.இந்திரகுமார், மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, த.கலையரசன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, த.கனகசபை, உள்ளிட்ட  கட்சியின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்;

இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் யோசப் பரராசசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஈகைச் சுடர ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டன.

கடந்த 2005 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பு புளியந்தீவு தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்களினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






























































SHARE

Author: verified_user

0 Comments: